Monday 18 July 2011

all are actors

எது பகுத்தறிவு ?

தேசிய அளவிலான அல்லது மனிதகுலம் முழுமைக்குமே உரியதான பழைய காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகள்;குடும்பம், நண்பர் நாடு,நாகரிகம்,சாஸ்திரங்கள்,பால் வேறுபாடு என்று ஏதோதோ சம்பத்தப்பட்ட மூட நம்பிக்கைகள் எல்லாம் நம்மைக் கட்டியுள்ளன. இதில் அறிவைப்பற்றி நாம் பேசுகிறோம்! அறிவுபூர்வமாகச் சிந்திப்பது எதோ ஒரு சிலர் மட்டுமே. ‘எதையெடுத்தாலும் நம்ப நான் தயாராக இல்லை.இருளில் உழல நான் தயாராக இல்லை. நான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்று பலர் சொல்வதைக் கேட்கிறோம்.அவ்வாறே ஆராயவும் மனிதன் தலைபடுகிறான்.
ஆனால் அவன் நெஞ்சோடு இறுகக் கட்டியனத்துள்ள பொருட்களையெல்லாம் அந்த ஆராய்ச்சி நொறுக்கித் தூள்தூளாக்கும்போது ‘இனி தாங்காது! எனது லட்சியங்களை உடைத்தெரியும்வரை ஆராய்ச்சி என்பது சரிதான், அத்தோடு நின்றுவிட வேண்டும்’ என்கிறான். இவன் ஒரு போதும் ஞானியாக மாட்டான். இந்த வாழ்க்கை என்றல்ல , இனி வரப்போகும் வாழ்க்கைகளிலும் அவன் தன தலைகளைச் சுமந்தே செல்கிறான். மரணத்தின் ஆதிக்கத்தில் அவன் மீண்டும் மீண்டும் வருகிறான் .இத்தகையோர் ஞானயோகத்திற்குதகுதியானவர்கள் அல்ல. பக்தி,கர்மம்,ராஜயோகம் என்று அவர்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் ஞானயோகம் அவர்களுக்கு இல்லை.
மிகவும் துணிவுடையவர்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பின்பற்ற முடியும் என்பதை முதலிலேயே உங்களுக்குச் சொல்லி, உங்களைத் தயார்படுத்த நான் விரும்புகிறேன், கோயிலை நம்பாதவனும், எந்த மதப்பிரிவையும் சாராதவனும், ‘எதையும் நம்பமாட்டேன்’ என்று சொல்லித்திரிபவனும் பகுத்தறிவுவாதி என்று எண்ணிவிடாதீர்கள். அப்படி இல்லவேயில்லை, அப்படியெல்லாம் பிதற்றித் திரிவது இன்று ஒரு வீரச் செயலாகக் கருதப்படுகிறது.
பகுத்தறிவுவாதியாக இருப்பதற்கு, அவநம்பிக்கை மட்டுமின்றி அதற்கு மேலும் பல வேண்டும். அறிவுபூர்வமாக ஆராய்வதுடன், அந்த ஆராய்ச்சி இட்டுச் செல்கின்ற வழியில் போவதற்கான துணிவு வேண்டும்.
இந்த உடம்பு ஒரு பொய்த்தோற்றம் என்று உங்கள் பகுத்தறிவு உங்களுக்கு கூறினால், உடம்பை விட்டுவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? சூடு, குளிர் என்பன வெல்லாம் வெறும் புலன் மயக்கங்களே என்று உங்கள் பகுத்தறிவு உங்களிடம் சொல்கிறது.பயமின்றி அவற்றைத் தாங்கிக்கொள்ள உங்களால் முடியுமா? புலன்கள் மனத்திற்குக் கொண்டுவருகின்ற அறிவு எல்லாமே பொய் என்று பகுத்தறிவு உங்களிடம் சொன்னால் புலனறிவை மறுக்க உங்களிடம் துணிவு இருக்கிறதா? இருக்குமானால் நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதி.
பகுத்தறிவையும் நம்பி, உண்மையையும் கடைப்படிப்பது என்பது மிகவும் கடினமானது. மூடத்தனமாக எதையாவது பின்பற்றுபவர்கள் அல்லது அரை ஆஷாடபூதிகள் – இவர்களால்தான் இந்த உலகமே நிறைந்திருக்கிறது. இந்த வேஷதாரிகளைவிட முட்டாள்களும் மூடர்களும் எவ்வளவோ மேல்! அவர்கள் நல்லவர்கள்.
-சுவாமி விவேகானந்தர்  

No comments:

Post a Comment